This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

நாம் எப்போதாவது நம் மூளையுடம் பேச முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? - Will we ever be able to communicate with only our minds?


நாம் எப்போதாவது நம் மூளையுடம் பேச முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா?

சயின்ஸ் பிக்சண் கதைகளை தவிர வேறு எங்கும் டெலிபதி என்று ஒன்று உள்ளதற்கான ஆதாரம் இல்லை. நாம் ஒருவரிடம் சொல்ல விரும்பும் விஷயத்தை பேசாமலையே நினைவலைகள் மூலமாக சொல்ல முடியும் என்பது, ஒரு வித்தை போன்றே உள்ளது. ஒரு நாள் இதை சாத்தியம் ஆக்குவதற்காக அறிவியல் அறிஞர்கல் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வகையான தொடர்பை "Computer Brain Interface" என்று கூறுகிறார்கள். இந்த தொழில்  நுட்பத்தின் மூலம், நம் மனதில் நினைப்பதை கம்ப்யூட்டர்ருக்கு  அனுப்பி, அதை  கம்ப்யூட்டர் புரிந்து கொண்டு, யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்கள் கம்ப்யூட்டர்ருக்கு அனுப்பும். அவர்கள் கம்ப்யூட்டர் அந்த  செய்தியை மனித மூளை புரிந்து கொள்ளும் செய்தியாக  மாற்றி, அவர்கள் மூளைக்கு கொண்டு செல்லும். இது சாத்தியம் என்றால்  "Computer Brain Interface" ஒரு புரட்சியையே உருவாக்கும்.

வாய் பேச முடியாதவர்கள் கூட சுலபமாக தங்கள் கருத்துகளை முன் வைக்க முடியும். மொழி என்ற வேறுபாடே இல்லாமல் போக வாய்ப்புள்ளது. இந்த அறிவியல் வளர்ச்சியின் தாக்கங்கலை நம்மால் முழுவதுமாக  சொல்ல இயலாது.நாம் இதுவரை  செய்த முன்னேற்றம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது.


"Subject A" தன் கையை அசைப்பதாக மனதில் எண்ணுகிறார். அவருடன் னைகப்பட்டுல்ல  கம்ப்யூட்டர்  அதை பதிவு செய்து, வலது கையை அசைக்க போகிறார் என்பதற்கு '1' என்றும் எடது கையை அசைக்க போகிறார் என்பதற்கு '0' என்றும் புரிந்து கொண்டு மற்றொரு பக்கம் கம்ப்யூட்டர் உடன் இணைந்துள்ளவருக்கு அனுப்பும். அந்த கம்ப்யூட்டர் இந்த "1" மற்றும் "0" வை மொழி பெயர்த்து விளக்கை எறிய வைக்கும்.இது "Subject B" மனதிற்கு புரிய வைக்கும்.

இந்த ஆராட்சி முதலாம் கட்டத்திலே தான் உள்ளது. மேலும் இந்த கண்டுபிடிப்பின் மூலம் வரபோகும் பிரச்சனைகலையும் அறிந்ஞர்கல் தேடி கொண்டு தான் உள்ளார்கள்.

தமிழகத்திற்கு வருகிறது ''Solar Energy Policy''

தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 - Tamil Nadu Solar Energy Policy 2012


சூரிய சக்தியானது, மனித குலத்திற்கு தூய்மையனதும், சுற்றுப்புறச் சூழலை மாசுஏற்ப படுத்தாத குறைவற்ற ஏறி சக்தி ஆதாரம் ஆகும்.

தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 - சிறப்பு அம்சங்கள்:

1) சூரிய சக்தி பூங்காகளை உருவாக்குதல்.

2) வீட்டு  உபயோக மின் நுகர்கள், சூரிய சக்தி மேற் கூரைகளை நிறுவ மின் உற்பத்தி அடிப்படையிலான  ஊக்க தொகை வழங்குதல்.

3) அரசு கட்டிடங்களில் சூரிய சக்தி மேற் கூரைகளை நிறுவுதல்.

4)  சூரிய சக்தி ஆவணங்களை தயாரிபவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல்.

5) சூரிய சக்தி மின் உற்பத்தி தயாரிப்பாலர்களுக்கு அளிகப்பட்டுள்ள சலுகைகள்.
        ௧) நெட் மிடேரிங்
        ௨) மின்சாரவரி செலுத்துவதில் இருந்து விலக்களித்தல்.
         ௩)  மின்தேவை வெட்டிலிருந்து விலக்களித்தல்.

புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு நிலை: 24 மணி நேரத்தில் கன மழை எச்சரிக்கை!



Due to Heavy rain in Chennai & other Puducherry and Cuddalore  districts,TN government announced that tomorrow(22.10.2012)  will be a holiday for schools & colleges. 


வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கி வருவதால், தமிழகத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழை எதிரொலியாக சென்னை, புதுச்சேரி, கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த முதல் மிக பலத்த மழை வரை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல புதுச்சேரியிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

'புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற வரி இளையராஜாவுக்காவே எழுதப்பட்டது!'



டல்லஸ்(யு.எஸ்): எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பங்கேற்ற டல்லாஸ் இசை நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி ஷைலஜா மற்றும் எஸ்.பி.பி சரணும் உடன் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்ட எஸ்.பி.பி 'தயவு செய்து ரஜினி, கமல், விஜயகாந்த் பாடல்கள் என்று பிரித்துப் பார்க்காமல் நான் பாடிய பாடல்களாக பாருங்கள். நாங்கள் முதலில் பாடிய பிறகுதான் அவர்கள் நடிக்கிறார்கள்.. அனைத்தையும் இங்கே பாடமுடியாது என்பதால் குறிப்பிட்ட 200 பாடல்களை தேர்வு செய்து, சென்னையில் நான்கு நாட்கள் குழுவினரோடு காலை முதல் மாலை வரை, பயிற்சி எடுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம். திடிரென்று நீங்கள் வேறு ஏதாவது பாடல்களை கேட்டால், இசைக்குழுவினரால் சரியாக வாசிக்க முடியாமல் போகலாம். 40,000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். நிறைய பாடல்கள் எனக்கே மறந்திருக்கும். இன்று நாங்கள் பாடும் அனைத்து பாடல்களையும் ரசித்து ஒத்துழைப்பு தாருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக அவரை அறிமுகப்படுத்தும் போது 'பால்காரன் முதல் ரோபோ வரை எந்த வேடத்தில் நடித்தாலும் தனக்கு டைட்டில் சாங் பாட சூப்பர் ஸ்டார் ரஜினி அழைப்பது எஸ்.பி.பி யைத் தான்" என்றதும் எழுந்த ஆரவாரமான கைத்தட்டல்களை பார்த்து உஷாராகி விட்டார் போலும். 

இளையராஜாவுக்காக எழுதிய பாடல் முதல் பாடலாக ‘மடை திறந்து' என்ற பாடலைத்தான் பாடினார் எஸ்.பி.பி. 'இந்தப் பாடலில் வரும் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே' என்ற வரிகளை, நான் பாடினாலும் அது இளையராஜாவுக்காகவே கவிஞர் வாலியால் எழுதப்பட்டது' என்று குறிப்பிட்டார். தமிழில் சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளையகன்னி' பாடல் மூலம் அறிமுகப்படுத்திய எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அடுத்தடுத்து வித்தியாசமான வாய்ப்புகள் கொடுத்த இளையராஜாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். சித்ராவுக்காக ஹரிஹரன் குரலில் வெவ்வேறு பாடல்களை பாடிக்கொண்டிருந்தவர், திடீரென்று ‘ உயிரே உயிரே' என ஏ.ஆர்.ரஹ்மானின் பம்பாய் பட பாடலை பாட ஆரம்பித்த்தும், பார்வையாளர்கள் பிரமிப்புக்குள்ளாகினர். மேடையில் அமர்ந்திருந்த சித்ராவின் முகத்தில் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி என பலவிதமான உணர்வுகள். பாடலின் இடையே அவர் சேர்ந்து கொண்டு பாடி முடித்தார். ஹரிஹரன் பாடிய இந்த பாடலை சித்ராவுக்காக பாடியதாகவும், இந்த கச்சேரி டூரில், தனக்கும், சரணுக்கும் சித்ரா துணைக் குரல் எல்லாம் கொடுத்து ரொம்பவும் பரவசப்படுத்தி வருகிறார். அதனால், அவருக்கு முக்கியமான இந்த பாடலை, ஹரிஹரன் வரவில்லையென்றாலும் நானே பாடினேன். இது அவருக்கு முன்னதாக தெரியாது. மேடையில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினேன் என்றார் எஸ்.பி.பி மேலும், எனக்கு அவர் மகள் போல் என்றாலும், இசைப் புலமையில் அவர் ரொம்ப பெரியவர். அவரது இசை ஞானத்திற்கு முன்னால் நான் ஏதும் அறியாதவன் என்றும் குறிப்பிட்டார்.

  இளைராஜாவைத் தந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு பாராட்டு இளையராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சண்முகநாதனும், மகள் கீதாவும் (தமிழ் சங்க உப தலைவர்) டல்லஸில் வசிக்கிறார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து, இந்த பாடல் பஞ்சு அருணாச்சலத்திற்கு நன்றி செலுத்துவதற்காக பாடுகிறேன் என்று ‘காதலின் தீபம் ஒன்று' பாடினார். இளையராஜா என்ற இசை மேதையை அறிமுகப்படுத்திய அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று புகழாரம் சூட்டினார். கம்பன் ஏமாந்தான், நீல வான ஓடையில் போன்ற பத்திற்கும் மேற்பட்ட பாடல்களை முதல் இரண்டு வரிகளுடன் மெட்லியாக பாடி அசத்தினார்.

  'ஆயிரம் நிலவே வா' வை கேட்க திரண்ட 1500 பேர் ஆயிரத்து ஐநூறு பேர் கொண்ட ஆடிட்டோரியம் நிறைந்து, டிக்கெட் கிடைக்காமல் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். டல்லாஸில் தமிழ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு அதிகம் பேர் திரண்டது இது தான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைவர் கலைநாயகம், உப தலைவர் கீதா, செயலாளர் சுமதி, பொருளாளர் சுப்ரா, செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ரகு, ஜலீலா, தங்கவேல், ஆலோசகர் விஜிராஜன் மற்றும் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர். எஸ்.பி.பி குழுவினரின் வருகையொட்டி, ஆடிட்டோரியத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 'மடை திறந்து' ஆரம்பித்த கச்சேரி 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற வேத வாக்காக நிறைவானது. இதுவரை டாம்பா, ராலே, சான் ஓசே, டல்லஸ் நகரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளை நட்த்தியுள்ள எஸ்.பி.பி குழுவினர், வாஷிங்டன் டிசி, சியாட்டில், போர்ட்லாண்ட், சான்டியாகோ, நியூ ஜெர்சி மற்றும் டொரோண்டாவில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அக்டோபர் 15 ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.