நாம் எப்போதாவது நம் மூளையுடம் பேச முடியும் என்று நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா?
சயின்ஸ் பிக்சண் கதைகளை தவிர வேறு எங்கும் டெலிபதி என்று ஒன்று உள்ளதற்கான ஆதாரம் இல்லை. நாம் ஒருவரிடம் சொல்ல விரும்பும் விஷயத்தை பேசாமலையே நினைவலைகள் மூலமாக சொல்ல முடியும் என்பது, ஒரு வித்தை போன்றே உள்ளது. ஒரு நாள் இதை சாத்தியம் ஆக்குவதற்காக அறிவியல் அறிஞர்கல் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த வகையான தொடர்பை "Computer Brain Interface" என்று கூறுகிறார்கள். இந்த தொழில் நுட்பத்தின் மூலம், நம் மனதில் நினைப்பதை கம்ப்யூட்டர்ருக்கு அனுப்பி, அதை கம்ப்யூட்டர் புரிந்து கொண்டு, யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்கள் கம்ப்யூட்டர்ருக்கு அனுப்பும். அவர்கள் கம்ப்யூட்டர் அந்த செய்தியை மனித மூளை புரிந்து கொள்ளும் செய்தியாக மாற்றி, அவர்கள் மூளைக்கு கொண்டு செல்லும். இது சாத்தியம் என்றால் "Computer Brain Interface" ஒரு புரட்சியையே உருவாக்கும்.
வாய் பேச முடியாதவர்கள் கூட சுலபமாக தங்கள் கருத்துகளை முன் வைக்க முடியும். மொழி என்ற வேறுபாடே இல்லாமல் போக வாய்ப்புள்ளது. இந்த அறிவியல் வளர்ச்சியின் தாக்கங்கலை நம்மால் முழுவதுமாக சொல்ல இயலாது.நாம் இதுவரை செய்த முன்னேற்றம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக உள்ளது.
"Subject A" தன் கையை அசைப்பதாக மனதில் எண்ணுகிறார். அவருடன் னைகப்பட்டுல்ல கம்ப்யூட்டர் அதை பதிவு செய்து, வலது கையை அசைக்க போகிறார் என்பதற்கு '1' என்றும் எடது கையை அசைக்க போகிறார் என்பதற்கு '0' என்றும் புரிந்து கொண்டு மற்றொரு பக்கம் கம்ப்யூட்டர் உடன் இணைந்துள்ளவருக்கு அனுப்பும். அந்த கம்ப்யூட்டர் இந்த "1" மற்றும் "0" வை மொழி பெயர்த்து விளக்கை எறிய வைக்கும்.இது "Subject B" மனதிற்கு புரிய வைக்கும்.